சுடச்சுட

    

    ராமநாதபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா

    By ராமநாதபுரம்  |   Published on : 29th July 2016 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் புளிக்காரத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

       இக்கோயில் முளைப்பாரி திருவிழா கடந்த 17 ஆம் தேதி முத்து எடுத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 19 ஆம் தேதி காப்புக்கட்டுதல் உற்சவமும், முத்துப் பரப்புதலும் நடைபெற்றன. விழாவைத் தொடர்ந்து, தினசரி கோயில் முன்பாக ஒயிலாட்டம், கும்மியடித்தல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

      ஜூலை 26 ஆம் தேதி சிறப்பு அபிஷேக பூஜைகளும், முகவை ஊருணியிலிருந்து கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. 27 ஆம் தேதி முளைப்பாரி ஊர்வலம் கோயிலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, நொச்சியூரணியில் நிறைவுபெற்றது.

      கோயில் அர்ச்சகர் எஸ். சந்திரன், கரக பூஜகர் டி. மனோகரன், கருப்பணசாமி பூசாரி எஸ். நம்புராஜன் ஆகியோர் அம்மனுக்கு சிறப்புப் பூஜைகளை நடத்தினர்.

      விழாவுக்கான ஏற்பாடுகளை, விழாக் குழு தலைவரும், அதிமுக நகரச் செயலருமான எம். அங்குச்சாமி தலைமையிலான குழுவினர், இளைஞர் அணி மற்றும் மகளிர் அணியினர் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai