சுடச்சுட

    

    ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடி அமாவாசை பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

    By ராமேசுவரம்  |   Published on : 29th July 2016 06:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் திருக்கோயிலுக்கு ஆடி ஆமாவாசை நாளில் வருகை தரும் பக்தர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருக்கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

      ராமேசுவரம் பகுதியிலுள்ள அனைத்து துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்தார். ராமேசுவரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

      கூட்டத்தில், ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஆடி அமாவாசை நாளையொட்டி ராமேசுவரம் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்தும், குடிநீர் வசதிகள் அமைப்பது, இரவு நேரங்களில் தடையில்லாமல் மின்சாரம் வழங்குவது, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துவது, பக்தர்களுக்கு இடையூறின்றி போக்குவரத்து வழித்தடங்களை மாற்றி அமைப்பது, திருகோயிலிலுள்ள தீர்த்தங்களின் வழித்தடங்களை மாற்றி அமைத்து பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.   இதில், திருக்கோயில் உதவிக் கோட்டப் பொறியாளர் மயில்வாகனன், நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா, சுற்றுலாத் துறை அலுவலர் பாலசுப்பிரமணியன், மின்வாரிய உதவிப் பொறியாளர் பாலுச்சாமி, திருக்கோயில் காவல்நிலைய ஆய்வாளர் அமுதச்செல்வி மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள், மத்திய, மாநில உளவுப் பிரிவு  மற்றும் போக்குவரத்து போலீஸார் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai