சுடச்சுட

    

    ராமேசுவரம் திருக்கோயிலில் அம்மன் தங்கப் பல்லக்கில் வீதியுலா

    By ராமேசுவரம்  |   Published on : 29th July 2016 06:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித் திருவிழா நடைபெற்று வருவதை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை பர்வதவர்த்தினி அம்மன் தங்கப் பல்லக்கில் நான்கு ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

       இத்திருக்கோயிலில் புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆடித் திருவிழா தொடங்கியது. இரண்டாம் நாளான வியாழக்கிழமை காலை பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்புப் பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. அதன்பின்னர், திருக்கோயிலில் இருந்து காலை 9 மணியளவில் தங்கப் பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி, நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

       இந்நிகழ்ச்சியில், திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவிக் கோட்டப் பொறியாளர் மயில்வாகனன், காசாளர் ராமநாதன், பேஷ்கார்கள் செல்லம், அண்ணாதுரை, அலுவலர்கள் மாரியப்பன், முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai