சுடச்சுட

    

    ஆக.2 முதல் 10 ஆம் தேதி வரை ராமநாதபுரத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்: முன்னேற்பாட்டுப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

    By ராமநாதபுரம்  |   Published on : 30th July 2016 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில், ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை இந்திய ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

       இம்முகாமில், தமிழகத்தில் உள்ள பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இத்தேர்வில், ஏராளமான இளைஞர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஓட்டப் பந்தயம், உடல் தகுதி, மருத்துவத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளின் மூலம் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.   எனவே, முகாம் நடைபெறும் நாளில் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் கூட்ட நெரிசலை தவிர்த்திடும் வகையில், தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

      அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை, ஆட்சியர் எஸ். நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு, இம்முகாமை சிறப்பாக நடத்திட தயார் நிலையில் இருந்திடுமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  இந்த ஆய்வின்போது, முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் கமாண்டர் விஜயகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காமாட்சி கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மகேஸ்வரன், பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளர் குருதிவேல்மாறன் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் உடன் சென்றிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai