சுடச்சுட

  

  திருவாடானை அருகே  சடலத்தை புதைக்க எதிர்ப்பு: வட்டாட்சியர் சமரசம்

  By திருவாடானை  |   Published on : 30th July 2016 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாடானை தாலுகா, புலியூர் கிராமத்தில் இறந்த பெண்ணின் சடலத்தை புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வட்டாட்சியர் சமரசத்துக்குப்  பின்னர் புதைக்கப்பட்டது.

     புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (70). இவரது சகோதரியான புதுக்கோட்டை மாவட்டம் கீழவெட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி (60) என்பவரும் இவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் ராஜாமணி வியாழக்கிழமை இரவு இறந்தார்.

     இவரது சடலத்தை, வெள்ளிக்கிழமை புலியூர் மயானத்தில் புதைக்க உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். அப்போது, அக்கிராம மக்கள் வெளியூரைச் சேர்ந்தவரை இங்கு புதைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவலறிந்து, திருவாடானை வட்டாட்சியர் சுகுமாரன், வருவாய் அலுவலர்கள் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து, அப்பெண்ணின் சடலம் புதைக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai