Enable Javscript for better performance
நயினார்கோவில் அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    நயினார்கோவில் அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு

    By பரமக்குடி  |   Published on : 30th July 2016 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் அருகே உள்ள மூவலூர் கிராமத்தில், வெள்ளிக்கிழமை கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருடப்பட்டுள்ளது.

       நயினார்கோவில் காவல் சரகத்துக்குள்பட்ட மூவலூர் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் பூசாரி சிவகாளி என்பவர் வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் கோயிலை அடைத்துவிட்டு வந்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை அவர் சென்றபோது, கோயில் கதவு உடைக்கப்பட்டு உள்ளே உண்டியலில் இருந்த 3.5 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

      இது குறித்து, நயினார்கோவில் காவல் நிலையத்தில் பூசாரி சிவகாளி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai