Enable Javscript for better performance
பைக்கில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை தாலுகா, ஆர்.எஸ்.மங்கலம் அருகே முத்துபேட்டையைச் சேர்ந்தவர் சவுந்திரபாண்டி (45). இவரது மனைவி செல்வி (35). இருவரும் செட்டிதிடல் கிராமத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

     அப்போது, எட்டியதிடல் கிராமத்தில் சென்றுகொண்டிருந்த போது, வாகனத்திலிருந்து தவறி விழுந்த செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

      இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சேசுராஜ் அளித்த புகாரின்பேரில், ஆர்.எஸ். மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai