சுடச்சுட

  

  ராமேசுவரம் திருக்கோயிலில் அம்மன் தங்க கேடயத்தில் வீதியுலா

  By ராமேசுவரம்  |   Published on : 30th July 2016 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமேசுவரம் திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, பர்வதவர்த்தினி அம்மன் தங்கக் கேடயத்தில் வெள்ளிக்கிழமை எழுந்தருளினார்.

     ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடித் திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கோயிலில் 17 நாள்கள் நடைபெறும் இத் திருவிழாவின் மூன்றாம் நாள் விழாவையொட்டி, அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

     பின்னர், திருக்கோயிலில் இருந்து மாலை 4 மணியளவில் பர்வதவர்த்தினி அம்மன் அலங்காரத்துடன் தங்கக் கேடயத்தில் புறப்பாடாகி,  தெற்குவாசல், நகைக் கடை பஜார், கடைத் தெரு ஆகிய வீதிகளின் வழியாக உலா வந்து, வர்த்தகன் தெருவில் அமைந்துள்ள திருக்கோயில் மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

     இந்நிகழ்ச்சியில், திருக்கோயில் பேஷ்கார் அண்ணாதுரை, கலைச்செல்வம், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன், அலுவலர்கள் பழனிமுருகன், துரை ஆகியோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai