சுடச்சுட

    

    கலாம் சிலைக்கு மாற்றுத் திறனாளிகள் மரியாதை

    By ராமேசுவரம்,  |   Published on : 31st July 2016 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சிலைக்கு சனிக்கிழமை ராமேசுவரம் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ராமேசுவரம் அருகே பேக்கரும்பு பகுதியில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கலாமின் சமாதி அமைந்துள்ள வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ராமேசுவரம் விவேகானந்தா குடில் சுவாமி பிரணவானந்தா தலைமை வகித்தார். ராமேசுவரம் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் மாரியப்பன் மற்றும் ராம்கோ சூப்பர் மார்க்கெட் பொறுப்பாளர் வேடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளும், விவேகானந்தா குடிலைச் சேர்ந்த பள்ளி குழந்தைகளும் கலாம் சமாதியில் அஞ்சலி செலுத்தி, வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், சுற்றுச்சூழலை காப்போம், கலாம் தொடக்கிவைத்த பசுமை ராமேசுவரம் திட்டத்தை நிறைவேற்றப் பாடுபடுவோம் உள்ளிட்ட உறுதிமொழிகள் எடுத்துக்கொண்டனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai