சுடச்சுட

  

  கீழக்கரையில் ரூ.9.87 கோடியில் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை: அமைச்சர் பங்கேற்பு

  By ராமநாதபுரம்  |   Published on : 31st July 2016 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் பல்வேறு இடங்களில் மொத்தம் ரூ.9.87 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணிக்காக, சனிக்கிழமை நடைபெற்ற பூமிபூஜையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் முரு. மணிகண்டன் பங்கேற்றார்.

  கீழக்கரை நகராட்சிக்குள்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது.

  இந்நிலையில், நகர் அபிவிருத்தி சாலை மேம்பாட்டுத் திட்டம்-2016 என்ற திட்டத்தின் கீழ், 1.84 கி.மீ. தொலைவுக்கு பேவர் பிளாக் அமைக்கும் பணி மற்றும் 8.03 கி.மீ. தொலைவுக்கு தார் சாலைகள் அமைக்கும் பணிக்காக மொத்தம் ரூ. 9.87 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  இதற்காக, கீழக்கரை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில், அமைச்சர் டாக்டர் முரு. மணிகண்டன் கலந்துகொண்டு, சாலை அமைக்கும் பணிகளைத் தொடக்கி வைத்தார்.

  இந்நிகழ்ச்சியில், கீழக்கரை நகர்மன்றத் தலைவர் ராவியத்துல் காதரியா, துணைத் தலைவர் காஜாமுகைதீன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எஸ். முகம்மது சிராஜ், நகராட்சிப் பொறியாளர் நடராஜன், அதிமுக திருப்புல்லாணி ஒன்றியச் செயலர் முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai