சுடச்சுட

  

  சிறுபான்மைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

  By ராமநாதபுரம்,  |   Published on : 31st July 2016 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரத்தில் சிறுபான்மைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் கல்விக் குழுவின் சார்பில், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

  ஆர்ப்பாட்டத்துக்கு, ராமநாதபுரம் வட்டார அதிபர் பங்குத்தந்தை ஏ. ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். தென்னிந்திய திருச்சபையின் பங்குத்தந்தை அமிர்தநாயகம், கொழும்பு ஆலிம் உயர்நிலைப் பள்ளித் தாளாளர் அன்சாரி, செயலர் மெஹர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையில் சிறுபான்மைப் பள்ளிகளுக்கு உள்ள உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், சிறுபான்மைப் பள்ளிகளில் சமஸ்கிருத மொழியை திணிப்பதாகவும் கண்டனம் தெரிவித்து, இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

  இதில், ராமநாதபுரம் வட்டார சிறுபான்மைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

  பரமக்குடியில் ஆர்ப்பாட்டம்: பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, பரமக்குடி மறைவட்ட பங்கு மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டாரப் பங்குத் தந்தை செபஸ்தியான் தலைமை வகித்தார். அருட்சகோதரர் அகஸ்டின், புஷ்பவனம் பங்குத்தந்தை சவரிமுத்து, முன்னாள் தலைமையைசிரியர் செபஸ்தியான் ஆகியோர், தேசிய கல்விக் கொள்கை வரைவு 2016 இல் குறிப்பிட்டுள்ள வேதக் கல்வி, சமஸ்கிருதம் திணிப்பு, யோகா கல்வி, பத்தாம் வகுப்பில் தரம் பிரித்தல், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை போன்ற கொள்கைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிப் பேசினர்.

  இதனைத் தொடர்ந்து, இக்கல்விக் கொள்கையை முற்றிலும் கைவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், பங்குத் தந்தையர்கள், அருள்சகோதரிகள், ஆசிரியர்கள், கிறிஸ்தவ சமூக மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

  பின்னர், பரமக்குடி வட்டாட்சியரை சந்தித்து அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு மனு அளித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai