சுடச்சுட

  

  தனியார் கல்லூரி கட்டணத்தை முறைப்படுத்த தனி ஆணையம் வேண்டும்

  By பரமக்குடி,  |   Published on : 31st July 2016 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் தனியார் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த தனி ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என, ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ.என். வசீகரன் தெரிவித்தார்.

  பரமக்குடியில் அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடையே மேலும் தெரிவித்ததாவது: கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு, வருவாய் 40 ஆயிரம் கோடியில் 10 ஆயிரம் கோடியை கல்விக்காக செலவிடுகிறது. ஆனால், தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் கல்வி கட்டணம் என்ற பெயரில் கொள்ளை வசூல் நடந்து வருகிறது. மாணவர்களிடம் வசூலிக்கும் கல்விக் கட்டணக் கொள்ளையை தடுக்க தனி ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

  இந்தியாவின் தலைநகரான தில்லி இன்று சுகாதாரத்தில் சிறந்து விளங்குகிறது. அதைப் பார்த்து தமிழகம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மக்களிடம் மாற்றத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம். 1 கோடி இளைஞர்கள் எங்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். எங்களது கொள்கையை மக்களிடம் எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்டவே, மாவட்டந்தோறும் நிர்வாகிகள் நியமனம் செய்து, சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai