சுடச்சுட

    

    தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை

    By ராமேசுவரம்,  |   Published on : 31st July 2016 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனுஷ்கோடி கடலோரப் பகுதியில் கலங்கரை விளக்கம் அமைப்பதற்கான இடத்தை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் சனிக்கிழமை தேர்வு செய்து பார்வையிட்டார்.

    ராமேசுவரம் பகுதியிலிருந்து 22 கி.மீ. தொலைவிலுள்ள தனுஷ்கோடி பகுதியில் கடலில் மூழ்கி அழிந்த இடங்களைத் தவிர, எஞ்சியுள்ள அரசு கட்டடங்கள், கோயில்களை காண தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

    இதனிடையே, தனுஷ்கோடி பகுதியை விரிவுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கியுள்ளன.

    அதில், ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரம் பகுதியிலிருந்து தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக மத்திய அரசு சார்பில் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அதேபோல், புயலில் சிக்கி சேதமடைந்த பழமையான கட்டடங்களையும் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அப்பகுதியில் தனுஷ்கோடி வரலாறு குறித்து ஒலி ஒளியுடன் கூடிய கண்காட்சி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதைத் தொடர்ந்து, தனுஷ்கோடிக்கும், முகுந்தராயர் சத்திரம் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் கலங்கரை விளக்கம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்பேரில், அப்பகுதியில் கலங்கரை விளக்கம் அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்வதற்காக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் அப்பகுதிக்குச் சென்று, பல்வேறு இடங்களைப் பார்வையிட்டார்.

    ஆட்சியருடன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராம்பிரதீபன், ராமேசுவரம் வட்டாட்சியர் ரெத்தினவள்ளி, துணை வட்டாட்சியர் அப்துல்ஜபார் ஆகியோரும் சென்றிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai