சுடச்சுட

    

    திருவாடானையில் குழந்தை திருமணம் நிறுத்தம்

    By ராமநாதபுரம்,  |   Published on : 31st July 2016 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருத்தேர்வளை கிராமத்தில் குழந்தைத் திருமணத்தை சனிக்கிழமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

    திருவாடானை தாலுகா துவார் கிராமத்தைச் சேர்ந்த மலைராஜ் என்பவரின் 16 வயது மகளுக்கும், திருத்தேர்வளை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பூமிநாதன் (27) என்பவருக்கும் செப்டம்பர் 5 ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இது குறித்து, சைல்டு-லைன் அமைப்பினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், தேவிபட்டினம் சைல்டு-லைன் துணை மையத்தின் அணி தலைவர் நாகநாதன், மாவட்ட சமூகநல அலுவலர் ஜானகி, சமூகநலத் துறை ஊர்நல அலுவலர் செங்கோல் ஏஞ்சல் மேரி ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், பெண்ணின் பெற்றோரிடம் குழந்தைத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்பதை எடுத்துக் கூறினர். பின்னர், திருமணத்தை நடத்தமாட்டோம் என உறுதிமொழி பெற்றோர்களிடம் எழுதி வாங்கி, குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai