Enable Javscript for better performance
தேசிய கல்வி கொள்கையை கண்டித்து கிறிஸ்தவ பள்ளி நிர்வாகிகள் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    தேசிய கல்வி கொள்கையை கண்டித்து கிறிஸ்தவ பள்ளி நிர்வாகிகள் பேரணி

    By திருவாடானை,  |   Published on : 31st July 2016 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     திருவாடானையில் கிறிஸ்தவ பள்ளிகளைச் சேர்ந்த தாளாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தேசிய கல்விக் கொள்கை 2016-க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பேரணி நடத்தினர்.

    திருவாடானை தாலுகாவில், சின்னகீரமங்கலம், ஓரிக்கோட்டை, ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, சவேரியார்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 17 கிறிஸ்தவப் பள்ளிகளைச் சேர்ந்த தாளாளர்கள், ஆசிரியர்கள், கன்னியாஸ்திரிகள் என 500-க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். இதற்கு, சிவகங்கை மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் ராஜா தலைமை வகித்தார். சி.கே.மங்கலம் பள்ளி நிர்வாகி சேசுராஜ், முப்பையூர் பள்ளித் தாளாளர் ஜான்பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாடானை பேருந்து நிலையத்திலிருந்து கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாகப் புறப்பட்ட இவர்கள், வட்டாட்சியர் சுகுமாரிடம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai