சுடச்சுட

    

    தேர்தல் வழக்கிலிருந்து திமுக முன்னாள் அமைச்சர் உள்பட 9 பேர் விடுவிப்பு

    By திருவாடானை  |   Published on : 31st July 2016 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன் உள்பட 9 பேர் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

    கடந்த 2011 இல் திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலின் போது, திமுக வேட்பாளர் சுப. தங்கவேலனுடன், சிவகுமார் என்ற ரித்தீஸ், ஆர்.எஸ்.மங்கலம் முன்னாள் ஒன்றியச் செயலர் நல்லசேதுபதி, உயர் நீதிமன்ற வழக்குரைஞர் காசிநாதன், ஒன்றியச் செயலர் ரவி, திருவாடானை நகரச் செயலர் ரவி, முத்துப்பெருமாள், முன்னாள் ஒன்றியத் தலைவர் முருகப்பன் மற்றும் திமுக தலைமைக் கழக உறுப்பினர் ஆணிமுத்து ஆகியோர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சென்றுள்ளனர்.

    ஐந்துக்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சென்றதால், அவர்கள் மீது வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் போலீஸார் போதிய சாட்சிகளை ஆஜர்படுத்தாத காரணத்தினால், நீதிபதி கிறிஸ்டல் பபிதா வழக்கிலிருந்து அனைவரையும் விடுவித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai