சுடச்சுட

    

    பள்ளிகளுக்கு இடையிலான மாநிலக் கால்பந்து: இறுதிப் போட்டியில் தஞ்சாவூர் அணி வெற்றி

    By தேவகோட்டை  |   Published on : 31st July 2016 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், தஞ்சாவூர் புனித ஆண்டனிஸ் பள்ளி அணி வெற்றி பெற்றுள்ளது.

    தேவகோட்டை தே பிரித்தோ முன்னாள் மாணவர் மன்றம் சார்பாக, முன்னாள் தலைமையாசிரியர் ஆல்பர்ட் மச்சாடோ நினைவாக, கடந்த 2 நாள்களாக இப்போட்டிகள் நடைபெற்றன. இதில், சிவகங்கை, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 20-க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றன.

    முதல் நாள் வெள்ளிக்கிழமை லீக் முறையிலான ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில், சனிக்கிழமை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. அரையிறுதியில் வெற்றி பெற்ற தஞ்சாவூர் புனித ஆண்டனிஸ் மேல்நிலைப் பள்ளி அணியும், நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளி அணியும் இறுதி ஆட்டத்தில் மோதின.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. பின்னர், டை பிரேக்கர் சுற்றில் 5-4 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூர் புனித ஆண்டனிஸ் மேல்நிலைப் பள்ளி அணி வென்று கோப்பையை தட்டிச் சென்றது. வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பையுடன் பரிசுகளும் வழங்கப்பட்டன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai