சுடச்சுட

    

    ஓரியூரில் பிரச்னைக்குரிய இடத்தில் கோயில் கட்ட முயற்சி: சிலைகள் பறிமுதல்

    By திருவாடானை  |   Published on : 30th May 2016 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை தாலுகா, ஓரியூரில் இரு தரப்பினருக்கு பிரச்னைக்குரிய இடத்தில் ஒரு தரப்பினர் கோயில் கட்ட முற்பட்டதால், போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி சுவாமி சிலைகளை பறிமுதல் செய்தனர்.

      ஓரியூரில் ஒரு தரப்பினர் கோயில் கட்ட முற்பட்டபோது, அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் தங்களுக்குச் சொந்தமான இடம் எனக் கூறி தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.   இந்நிலையில், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், இடம் யாருக்குச் சொந்தம் என விசாரணை முடியும் வரை அந்த இடத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என தீர்மானிக்கப்பட்டது.  இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை ஒரு தரப்பினர் அந்த இடத்தில் விநாயகர், லிங்கம், நந்தி, பீடம், அம்மன் உள்ளிட்ட சிலைகளுடன் கோயில் கட்டப் போவதாகத் தெரிவித்தனர். தகவலறிந்த திருவாடானை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையிலான போலீஸார், அவர்களிடமிருந்து சுவாமி சிலைகளைக் கைப்பற்றினர். பின்னர் அவற்றை, திருவாடானை துணை வட்டாட்சியர் முத்துக்குமார் வசம் ஒப்படைத்தனர்.

     மேலும், இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai