Enable Javscript for better performance
கடல் ஆமைகள் பாதுகாப்பு: மீனவ கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கடல் ஆமைகள் பாதுகாப்பு: மீனவ கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 28th November 2016 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்து மீனவ கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    கடலோரப் பகுதிகளில் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும். அங்கு வசித்து வரும் மீனவ குடும்பத்தினர் மணலில் நடந்து செல்லும்போது  கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதியை அறியாமல் சேதப்படுத்தி விடலாம். எனவே கடல் ஆமைகளைப் பாதுகாப்பது குறித்து கடலோர கிராமங்களான கரையூர், நடராஜபுரம், சின்னப்பாலம், வளையர்வாடி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு பல்லுயிர் பரவல், பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் அரும்புகழ் தனியார் அறக்கட்டளை மற்றும் மண்டபம் வனச்சரக அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு மண்டபம் வனச்சரக அலுவலர் சதீஷ் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் இயக்குநர் லதாமதிவாணன் முன்னிலை வகித்தனர். கடலில் வாழும் ஆமைகளால் ஏற்படும் பயன்கள் குறித்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
       பின்னர் வனச்சரக அலுவலர் ஆமைகள் கடலில் வாழ்வதால் உணவு மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும், பவளப் பாறைகள் பாதுகாக்கப்படும், கடல் தூய்மையாகும் என விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் மீனவர்களும், மீனவக் குழந்தைகளும் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai