Enable Javscript for better performance
முன் விரோத மோதல்: 6 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    முதுகுளத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இளைஞரைத் தாக்கியதாக 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
        முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோது எஸ்.குளத்தைச் சேர்ந்த பிலியார் மகன் அஜித்குமார்(22). இவர், சவேரியார் பட்டணம் விலக்கு ரோடு அருகே தனது டிராக்டரை ஓட்டி வந்த போது, முன்விரோதம் காரணமாக, மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த முகமது ரபீக் மகன் முகமது சதாம்(22), முனியசாமி மகன் சரத்குமார்(20), மணி மகன் நல்லுபிரசாத் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் சேர்ந்து அஜித்குமாரை தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த அஜித்குமார் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இளஞ்செம்பூர் காவல்நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் அல்லிராணி 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai