Enable Javscript for better performance
மூத்தோர் சதுரங்கப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் சிவகங்கை மாவட்ட சதுரங்கக் கழகம், கானாடுகாத்தான் சதுரங்கக் கழகம் ஆகியன சார்பில் மாநில மூத்தோர் (வெட்ரன்) சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன.
    50 வயதுக்கு மேற்பட்டோர், 65 வயதுக்கு மேற்பட்டோர் என 2 பிரிவுகளாக போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. 50 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் திருச்சியைச் சேர்ந்த ஆர். முரளிதரன் முதலிடத்தையும், 65 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் திருச்சியைச் சேர்ந்த டி.வி சுப்பிரமணியன் முதலிடத்தையும் பெற்றனர்.
    பரிசளிப்பு விழாவுக்கு மாநில சதுரங்கக் கழக துணைத் தலைவர் ஆர்.எம்.என். கருப்பையா தலைமை வகித்தார். மாநில இணைச் செயலர் அப்துல்நாசர் முன்னிலை வகித்தார். மாநில இணைச் செயலர் பாலகுணசேகர், சதுரங்கக் கழக சிவகங்கை மாவட்ட துணைத் தலைவர் சேவு. முத்துக்குமார், எம்.ஆனந்த் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
    முன்னதாக சிவகங்கை மாவட்ட சதுரங்கக்கழக செயலாளர் எம். கண்ணன் வரவேற்றார். பொருளாளர் ஏ.ஜி. பிரகாஷ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai