Enable Javscript for better performance
ராமேசுவரம் பூங்கா சுற்றுச் சுவரை சீரமைக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரம் பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் பூங்கா வளாக சுற்றுச் சுவரின் ஒரு பகுதி மழையால் சேதமடைந்து கீழே விழுந்துள்ளது.
        ராமேசுவரம் பேருந்து நிலைய வளாகத்தின் ஒரு பகுதியில் இந்த திருவள்ளுவர்  பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில், ராமேசுவரம் வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்கும் வகையில் மர நிழலில் இருக்கைகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால், வாகனத்தில் வரும் பக்தர்கள் ஏராளமானோர் இந்த பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர்.
      இந்நிலையில், ராமேசுவரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால், பேருந்து நிலையத்துக்குள் வரும் பூங்காவின் ஒரு பகுதி சுற்றுச் சுவர்  திடீரென இடிந்து விழுந்தது. எனவே, இந்த சுற்றுச் சுவரை உடனடியாக சீர்செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai