Enable Javscript for better performance
வளர்ச்சிப் பணிகள்: அரசு முதன்மை செயலாளர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுத்துறைகளின் சார்பில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அதிகாரியும், போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளருமான சந்திரகாந்த் பி.காம்ப்ளே  ஆய்வு செய்தார்.
    ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் அரசின் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்க் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலி அக்பர், ஊரக வளர்ச்சி முகமையின் மாவட்ட திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, பரமக்குடி சார் ஆட்சியர் சு.சமீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட கணிப்பாய்வு அதிகாரியும், போக்குவரத்துத்துறையின் முதன்மை செயலாளருமான சந்திரகாந்த் பி.காம்ப்ளே மாவட்டத்தில் நடந்து வரும் அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். விவசாயிகளின் நலனை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
    கூட்டத்துக்கு பின்னர் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுந்தரமுடையானில் உள்ள மாதிரி தோட்டக்கலைப் பண்ணையை யினை ஆட்சியருடன் சென்று அரசு முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு செய்தார். நவீன தொழில் நுட்பத்தைப் புகுத்தி அதிக அளவில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். ஆய்வின் போது தோட்டக்கலை அதிகாரி எஸ்.நாகராஜனும் உடன் இருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai