Enable Javscript for better performance
திருவாடானை அருகே குடிநீர் குழாய் சேதம்:வீணாகும் தண்ணீர்- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை அருகே குடிநீர் குழாய் சேதம்:வீணாகும் தண்ணீர்

    By DIN  |   Published on : 08th October 2016 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை அருகே சி.கே.மங்கலத்தில் தேவகோட்டை சாலையில் தொண்டி நம்புதாளைக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்கள் ஆகிறது. ஆனால், இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளதால், சாலையில் குடிநீர் வீணாகச் செல்கிறது.
    இதனால் சாலையும் பழுதடைந்துள்ளது.
    இது குறித்து, அப்பகுதியினர் சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழாயை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai