Enable Javscript for better performance
தேசிய அளவில் குண்டு எறிதல் போட்டிக்கு தேர்வான பரமக்குடி மாணவிக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    தேசிய அளவில் குண்டு எறிதல் போட்டிக்கு தேர்வான பரமக்குடி மாணவிக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 08th October 2016 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவி தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாணவி, பள்ளி கல்விக் குழு சார்பில் வெள்ளிக்கிழமை பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
    தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் ஜூனியர் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில், பரமக்குடி பள்ளி மாணவி எம். சர்மிளா 14 வயது பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்று, 11.23 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
    மேலும், இம்மாணவி நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். வெற்றிபெற்ற மாணவியையும், பயிற்சியாளர் சரவணசுதர்சன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுருராஜா, அன்வர்ராஜா ஆகியோரை, பள்ளியின் தாளாளர் எம். சாதிக் அலி, தலைமையாசிரியர் எம். அஜ்மல்கான், உதவித் தலைமையாசிரியர் ஏ.கே. முகம்துயாக்கூப் உள்பட கல்விக்குழு நிர்வாகிகள் பாராட்டி கெளரவித்தனர். ஆசிரியர் கலீல் ரகுமான் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai