Enable Javscript for better performance
பள்ளி வாகனங்களுக்கு நடத்துநர்கள் அவசியம்: வட்டாரப் போக்குவரத்து அதிகாரி தகவல்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி வாகனங்களுக்கு நடத்துநர்கள் அவசியம்: வட்டாரப் போக்குவரத்து அதிகாரி தகவல்

    By DIN  |   Published on : 08th October 2016 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் அனைத்திலும் கண்டிப்பாக நடத்துநர்கள் பணியில் இருக்கவேண்டும் என, வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஷேக் முகம்மது வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
    இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மொத்தம் 460 உள்ளன. பள்ளி திறப்பதற்கு முன் இந்த வாகனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 11 வாகனங்களில் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் குறைபாடுகளை சரிசெய்த பின்னரே அவற்றை இயக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
    பள்ளி வாகனங்கள் எதுவாக இருப்பினும், அதில் ஒருவர் நடத்துநராக இருக்க வேண்டியது அவசியம். அவர் 50 வயதுக்கு உள்பட்டவராகவும், நல்ல உடல் தகுதி உடையவராகவும் இருக்கவேண்டும். பள்ளிகள் முடிந்து மாணவ, மாணவியரை அவர்களது இருப்பிடங்களுக்கு அருகில் இறக்கி விடும்போது, அவர்களது பெற்றோரிடமோ அல்லது பொறுப்பாளர்களிடமோ ஒப்படைத்து விட்டுத்தான் செல்லவேண்டும். நடத்துநராகப் பணிபுரியும் ஒவ்வொருவரும் தங்களது குழந்தைகள் போல அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும். கடந்த 3 மாதங்களாக நடத்தப்பட்ட சோதனையில் 12 பள்ளி வாகனங்களில் நடத்துநர்கள் இல்லை என்பது தெரியவந்து, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளி வாகனங்களில் நடத்துநர்கள் இருக்கிறார்களா என்பதையும் கண்காணித்து வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai