Enable Javscript for better performance
பாம்பன் சாலைப் பாலத்திலிருந்து கடலில் தூண்டில் மீன்பிடிக்கும் இலங்கை அகதிகள்- Dinamani

சுடச்சுட

    

    பாம்பன் சாலைப் பாலத்திலிருந்து கடலில் தூண்டில் மீன்பிடிக்கும் இலங்கை அகதிகள்

    By DIN  |   Published on : 08th October 2016 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாம்பன் சாலைப் பாலத்திலிருந்து தூண்டில் மூலம் மீன்பிடித்த இலங்கை அகதிக்கு, வெள்ளிக்கிழமை அரியவகையான களவாய் மீன் சிக்கியது.
    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள சிலர், மண்டபம் கடல் பகுதியிலும், பாம்பன் ரயில் மற்றும் சாலைப் பாலத்திலிருந்தும் தூண்டிலிட்டு மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், மண்டபம் அகதி முகாமைச் சேர்ந்த நிஷாந்தன் (19) என்ற இளைஞர், பாம்பன் சாலைப் பாலத்திலிருந்து கடலில் தூண்டிலிட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, இவரது தூண்டிலில் அரியவகையான களவாய் மீன் சிக்கியது. 600 கிராம் எடையுள்ள இந்த மீனை, அப்பகுதியில் வாகனத்தில் சென்றவர்கள் ரூ. 300 விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai