Enable Javscript for better performance
பாம்பன் ரயில் பாலத்துக்கு புதிய இரும்பு கர்டர்கள்- Dinamani

சுடச்சுட

    

    பாம்பன் ரயில் பாலத்தில் புதிய இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    பாம்பன் கடல் மீது 2.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தில் தண்டவாளங்களை தாங்கி நிற்கும் வகையில், சிமென்ட் தூண்களுக்கு மேல் 144 இரும்பு கர்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரும்பு கர்டர்களில் சில கடல் உப்புக் காற்றால் அரிக்கப்பட்டு, துருப்பிடித்து சேதமடைந்திருந்தது.
    எனவே, ரயில்வே நிர்வாகம் கடந்த 2015 இல் முதல் கட்டமாக 28 இரும்பு கர்டர்களை மாற்றியது. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ரூ. 6 கோடி மதிப்பில் 16 இரும்பு கர்டர்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பேரில், கடந்து செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் இரும்பு கர்டர்கள் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    பாலத்தில் ரயில் போக்குவரத்தை நிறுத்தாமல் பணிகள் நடைபெற்று வருவதால், வாரத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாள்களில் மட்டுமே இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை 6 ஆவது இரும்பு கர்டர் பொருத்தும் பணி நடைபெற்றது. அப்போது, கடலில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் தூண் எண் 51, 52-இல் பொருத்தப்பட்டிருந்த பழைய இரும்பு கர்டர்கள் மாற்றப்பட்டன.
    பாம்பன் சாலைப் பாலத்தில்
    மின் விளக்குகள் சீரமைப்பு
    ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடல் மீது 2.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள சாலைப் பாலத்தின் இருபுறங்களிலும் 214 மின்விளக்குத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 191 விளக்குகள் எரியவில்லை. எனவே, கடந்த சில மாதங்களாக இப்பாலம் இருளில் மூழ்கியது.
    இதனால், ராமேசுவரம் திருக்கோயிலுக்கு வாகனத்தில் வரும் பக்தர்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பாலத்தை கடந்து சென்று வந்தனர். எனவே, பாம்பன் சாலைப் பாலத்தில் அனைத்து மின்விளக்குகளும் எரிவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    அதையடுத்து, மின்விளக்குகளை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். வெள்ளிக்கிழமை, பாம்பன் சாலைப் பாலத்தில் சேதமடைந்த மின்விளக்குகளை சீரமைத்து, புதிதாக வயர் மற்றும் பல்பு மாற்றும் பணிகள் நடைபெற்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai