Enable Javscript for better performance
போலி ஆவணம் மூலம் காப்பீடு பெற முயன்றவர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    விபத்து வழக்கில் போலி ஆவணம் கொடுத்து காப்பீடு பெற முயன்றவர் மீது, போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    மதுரை ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனத்தின் கோட்ட மேலாளராக இருந்து வருபவர் முத்துராமலிங்ம். இவர், ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விஜயன் மகன் தமிழரசன் என்பவர் விபத்து வழக்கில் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகையை பெற போலியான ஆவணம் கொடுத்து நிறுவனத்தை ஏமாற்ற முயன்றதாகத் தெரிவித்திருந்தார். இப்புகாரின்பேரில், ராமநாதபுரம் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சிவசக்தி, முத்துராமலிங்கம் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai