Enable Javscript for better performance
மீனவர்கள் "லைப் ஜாக்கட்' அணிந்து கடலுக்குச் செல்ல வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மீனவர்கள் "லைப் ஜாக்கட்' அணிந்து கடலுக்குச் செல்ல வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 08th October 2016 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி, உயிர் பாதுகாப்பு மிதவை அணிந்து (லைப் ஜாக்கட்) செல்லவேண்டும் என, தமிழக கடலோரப் பாதுகாப்பு போலீஸார் வலியுறுத்தினர்.
    மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழக கடலோரப் பாதுகாப்பு போலீஸார் ராமேசுவரம் பகுதிகளில் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மண்டபம் பகுதியிலுள்ள தமிழக கடலோரப் பாதுகாப்பு போலீஸார் சார்பில், பாம்பன் கடலோரப் பகுதியில் விழிப்புணர்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
    இந்தக் கூட்டத்தில், காவல் நிலைய ஆய்வாளர் ஜோதிபாசு கலந்துகொண்டு பேசியதாவது: கடலுக்குச் செல்லும் மீனவர்கள் சந்தேகப்படும்படியான படகுகளோ, ஏதேனும் மர்மப் பொருள்களோ மிதந்து வந்தால், அது குறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதுபோல், மீனவர்கள் என்ற பெயரில் படகுகளில் பொருள்கள் கடத்தப்பட்டாலும் தகவல் தரவேண்டும்.
    கடல் சீற்றத்தில் சிக்கியோ அல்லது படகு பழுதாகி கடலில் மூழ்கும் நிலையிலோ உயிரிழப்பு நேரிடாமல் காக்க, அனைத்து மீனவர்களும் உயிர் பாதுகாப்பு மிதவையை அணிந்து செல்லவேண்டும். மீனவர்கள் கடல் சீற்றத்தில் சிக்கித் தவிக்கும்போது, போலீஸாருக்கு உடனடியாக தகவல் தரும்பட்சத்தில், மீனவர்களை மீட்பதற்கு உதவி செய்யப்படும். இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லக்கூடாது எனவும் வலியுறுத்தினார். இதில், பாம்பன் பகுதி மீனவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai