Enable Javscript for better performance
ரூ. 2 கோடியில் சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம்: முன்னோடி வங்கி மேலாளர்- Dinamani

சுடச்சுட

    

    ரூ. 2 கோடியில் சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம்: முன்னோடி வங்கி மேலாளர்

    By DIN  |   Published on : 08th October 2016 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில், கிராமத்து இளைஞர்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் ரூ. 2 கோடி மதிப்பில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுரேஷ்பாபு வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
    இது குறித்து அவர் மேலும் கூறியது: ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு சுயதொழில் பயிற்சிகளை கற்றுக் கொடுத்து, அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேறக் காரணமாக இருந்து வருகிறது.
    தற்போது, இம்மையத்தில் செல்லிடப்பேசி பழுது நீக்கும் பயிற்சி, பெண்களுக்கான எம்பிராய்டரி மற்றும் பேப்ரிக் பெயின்டிங்ஸ் ஆகியன கற்றுத் தரப்படுகிறது.
    நவம்பர் 1 ஆம் தேதி முதல் இன்வெர்ட்டர், யு.பி.எஸ். தயாரிப்பு மற்றும் பழுது நீக்கும் பயிற்சியும் கற்றுத் தரப்படவுள்ளது.
    இவை அனைத்தும் குறுகிய கால இலவசப் பயிற்சியாகவும், தேநீர், உணவு ஆகியனவும் வழங்கப்பட்டு வருகிறது. இப் பயிற்சி மையத்துக்கென புதிய கட்டடம் கட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுடன் இணைந்து இடம் தேர்வு நடைபெற்று வருகிறது. இம்மையம் ரூ. 2 கோடி மதிப்பில் விடுதி மற்றும் உணவக வசதியுடன் கட்டப்படும். தேசிய கிராமிய வளர்ச்சி பயிற்சி நிறுவனம் ரூ. 1 கோடி மானியமாகவும், மீதத் தொகையான ரூ.1 கோடியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் வழங்குகிறது எனத் தெரிவித்தார்.
    பேட்டியின்போது, பயிற்சி மையத்தின் இயக்குநர் ஆர். சியாமளாநாதன், மேலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai