Enable Javscript for better performance
ரூ.3.25 லட்சம் மோசடி செய்த ராமநாதபுரம் கோழி வியாபாரி கைது- Dinamani

சுடச்சுட

    

    ரூ.3.25 லட்சம் மோசடி செய்த ராமநாதபுரம் கோழி வியாபாரி கைது

    By DIN  |   Published on : 08th October 2016 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோயம்புத்தூரைச் சேர்ந்த கோழி வியாபாரியிடம் ரூ. 3.25 லட்சம் மோசடி செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக, ராமநாதபுரத்தைச் சேர்ந்த கோழி வியாபாரியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
    கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியில் கோழிகள் மொத்த வியாபாரம் செய்து வருபவர் ஜோசப் துரைராஜ் மகன் பாஸ்கர் லியோ (41). இவரிடம், ராமநாதபுரம் பவுண்டுக் கடைத் தெருவில் கோழி வியாபாரம் செய்துவரும் அழகர்சாமி மகன் மணிகண்டன் (38) என்பவர் 3.25,645 ரூபாய்க்கு, கடந்த 2014 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் கோழி கொள்முதல் செய்துவிட்டு, பணம் தராமல் இழுத்தடித்து வந்தாராம்.
    இந்நிலையில், அத்தொகையை கோழி வியாபாரி பாஸ்கர் லியோ கேட்க வந்தபோது, பணம் தராமல் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தாராம். இது தொடர்பாக பாஸ்கர் லியோ அளித்த புகாரின்பேரில், ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai