Enable Javscript for better performance
அப்துல்கலாம் சமாதி வளாகத்தில் இரண்டாவது நாளாக பொறியாளர்கள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அப்துல்கலாம் சமாதி வளாகத்தில் இரண்டாவது நாளாக பொறியாளர்கள் ஆய்வு

    By DIN  |   Published on : 15th October 2016 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் அருகே அப்துல்கலாம் சமாதி வளாகத்தில் மணிமண்டபம் கட்டுவதற்காக இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை பொறியாளர்கள் ஆய்வுப்பணியில்  ஈடுபட்டனர்.
     இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் சமாதி ராமேசுவரம் அருகே பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அப்துல்கலாமின் நினைவு மண்டபம் அமைப்பதற்கு மத்திய அரசு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கலாமின் 85 ஆவது பிறந்தநாளான சனிக்கிழமை நினைவுமண்டபம் அமைப்பதற்கான கட்டடப்பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற உள்ளது. இதனையொட்டி வளாகத்தில் நிலத்தின் தன்மை குறித்து அதிநவீன இயந்திரம் மூலம் பொறியாளர்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai