Enable Javscript for better performance
இளைஞர் சாவில் சந்தேகம்: சடலத்தை வாங்க மறுத்து மறியல்- Dinamani

சுடச்சுட

    

    முதுகுளத்தூர் அருகே விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்த இளைஞர் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் ஈடுபட்டனர்.
        முதுகுளத்தூர் அருகே வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிவக்குமார்(33). இவர் முதுகுளத்தூரில் மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து வியாழக்கிழமை இரவு தனது பைக்கில் வீட்டிற்கு சென்ற போது மின்வாரிய அலுவலகம் முன்பு விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்துள்ளார். தகவலறிந்து வந்த அவரது உறவினர்கள் மீட்டு மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் சிவக்குமார் இறந்து விட்டார். அவரது சடலம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
      சிவக்குமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     முதுகுளத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கணபதி சமரசப் பேச்சு நடத்தி மறியலை கைவிடச் செய்தார். மறியலால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai