Enable Javscript for better performance
கலாம் பிறந்த தினம்: ராமநாதபுரத்தில் இன்று அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    கலாம் பிறந்த தினம்: ராமநாதபுரத்தில் இன்று அறிவியல் கண்காட்சி

    By DIN  |   Published on : 15th October 2016 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக் க.ஜெயக்கண்ணு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
       அவரது செய்திக்குறிப்பு: அப்துல்கலாமின் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படும். ராமநாதபுரத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த படைப்புகளுடன் கண்காட்சி நடத்தப்படும். இது குறித்து அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் க.ஜெயக்கண்ணு தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai