Enable Javscript for better performance
சார்பு ஆய்வாளரை அரிவாளால் வெட்டியவருக்கு 3 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    சார்பு ஆய்வாளரை அரிவாளால் வெட்டியவருக்கு 3 ஆண்டு சிறை

    By DIN  |   Published on : 15th October 2016 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவல் சார்பு ஆய்வாளரை அரிவாளால் வெட்டியவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயராஜ் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
     ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணி செய்து வந்தவர் செல்லபாண்டி. இவர் கடந்த 17.11.2014-இல் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் அருகே பிரப்பன்வலசை கிராமத்திலிருந்து திருப்புல்லாணி நோக்கிச் சென்றபோது காரான் கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் மகன் கருப்பு என்ற கருப்பையா(30) திடீரென அரிவாளால் தாக்கினராம்.
    அதில் செல்லப்பாண்டி பலத்த காயம் அடைந்தார்.
    ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
    வாகன சோதனையில் செல்லப்பாண்டி ஈடுபட்டிருந்த போது ஆவணங்கள் இல்லாமல் இருந்த வாகனத்தை ஒட்டியது தொடர்பாக கருப்பையா மீது வழக்குப் பதிவு செய்தாராம். இதனால் முன்விரோதம் ஏற்பட்டு செல்லப்பாண்டியை கருப்பையா அரிவாளால் தாக்கியிருந்தார். இச்சம்பவம் தொடர்பாக உச்சிப்புளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.
    இந்த வழக்கு ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கருப்பையாவுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும்,ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயராஜ் தீர்ப்பளித்தார்.
     அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai