Enable Javscript for better performance
தியாகி சங்கரலிங்கனார் நினைவுநாள் அனுசரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
      சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயரிடுதல், மதுவிலக்கை அமல்படுத்தக் கோருவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 77 உண்ணாவிரதம் இருந்த தியாகி சங்கரலிங்கனார் கடந்த 1956-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதியன்று உயிர் நீத்தார். கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் நடைபெற்ற அவரது நினைவு நாள் விழாவுக்கு அந்த அமைப்பின் தலைவர் அ.ஜோசப் தலைமை வகித்தார். அ.கணேசன் வரவேற்றார்.
     விழாவில் தியாகி சங்கரலிங்கனார் வாழ்க்கை வரலாறு குறித்து சிறப்புரையாற்றப்பட்டது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், நீதிமன்ற ஆட்சிமன்ற மொழியாக தமிழை நடைமுறை படுத்தக் கோரியும், மருத்துவம், பொறியியல் படிப்பை தமிழில் படிக்க வழி செய்யக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இலக்கிய மன்ற நிர்வாக உறுப்பினர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai