Enable Javscript for better performance
தீபாவளிக்கு கைத்தறித் துணிகள் ரூ.50 லட்சத்துக்கு விற்க இலக்கு- Dinamani

சுடச்சுட

    

    தீபாவளிக்கு கைத்தறித் துணிகள் ரூ.50 லட்சத்துக்கு விற்க இலக்கு

    By DIN  |   Published on : 15th October 2016 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் வளர்ச்சித்துறை மகாலில் சிறப்பு கைத்தறிக் கண்காட்சியை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தொடக்கி வைத்தார்.
    மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகமும், மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறையும் இணைந்து ராமநாதபுரம் வளர்ச்சித்துறை மகாலில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் நேரடி சிறப்புத் தள்ளுபடி விற்பனை மற்றும் சிறப்பு கைத்தறிக் கண்காட்சியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் வெள்ளிக்கிழமை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
    பின்னர் ஆட்சியர் பேசியது: இம்மாதம் 27 ஆம் தேதி வரை இந்த சிறப்புக் கைத்தறிக் கண்காட்சி நடைபெறும். 40 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், சேலம், விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தங்களது அரங்குகளை அமைத்து ஜவுளிகளை விற்பனைக்கு வைத்துள்ளன.
    கைத்தறி நெசவாளர்களின் தயாரிப்புகளான பெட்ஷீட்டுகள், பட்டுச்சேலைகள், பட்டு வேட்டிகள், கோரா சேலைகள், பருத்தி சேலைகள், துண்டுகள், சின்னாளப்பட்டி சேலைகள், உயர்தர காட்டன் வேட்டிகள், சேலைகள், லுங்கிகள் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விற்பனையாகும் ஜவுளிகளுக்கு 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ராமநாதபுரத்தில் நடந்த கண்காட்சியில் ரூ.45 லட்சத்திற்கு விற்பனை நடந்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.50லட்சத்துக்கு விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் எஸ்.நடராஜன் பேசினார்.
    முன்னதாக, மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா முன்னிலை வகித்தார். கைத்தறித்துறை உதவி இயக்குநர் க.மனோகரன் வரவேற்றுப் பேசினார்.
    துணிநூல் கட்டுப்பாட்டு அலுவலர் செ.சம்பத் நன்றி கூறினார். விழாவில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்க இயக்குநர்கள் வி.ஜி.அய்யான், எம்.எம்.சுந்தரி, பரமக்குடி கைத்தறி உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.என்.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai