Enable Javscript for better performance
பாம்பன் ரயில் பாலத்தில் சீரமைப்புப் பணிகள்- Dinamani

சுடச்சுட

    

    பாம்பன் ரயில் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள தண்டவாளப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
    மண்டபம் பகுதியையும், ராமேசுவரம் தீவுப் பகுதியையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் 144 இரும்பு கர்டர்களுக்கு மேல் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடல் உப்பு காற்றால் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளங்கள் பாதிக்கப்படும். மேலும் இரும்பு கர்டர்களுக்கும் இடையில் பொருத்தப்பட்டுள்ள இணைப்புகள் துருப்பிடித்து சேதமடையும்.
    இதற்காக அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் நடைபெறும். அதன்படி வெள்ளிக்கிழமை பாலத்தில் தண்டவாளம் மாற்றும் பணிகள் உள்பட சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. மேலும் இரும்பு தூண்களை மாற்றும் பணிகளும், தூக்குப்பாலத்தின் திறனை அதிகப்படுத்த இரும்பு பட்டைகள் இணைக்கும் பணிகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai