Enable Javscript for better performance
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் தபால்தலை வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் தபால்தலை வெளியீடு

    By DIN  |   Published on : 15th October 2016 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் மாரியப்பனின் தபால்தலை வெளியிடப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட உதவிக் கண்காணிப்பாளர் விஜயகோமதி   வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
     அவர் கூறியது: தபால்தலையில் தமது புகைப்படங்களை வைத்துக்கொள்ளும் புதிய திட்டத்தை இந்திய அஞ்சல்துறை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் புகைப்படங்களுடன் கூடிய அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அஞ்சல் தலைகளின் இடதுபுறத்தில் வாடிக்கையாளர்களின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். இந்த அஞ்சல் தலைகள் மூலம் இந்தியா முழுவதும் 20 கிராம் வரையிலான தபால்களை அனுப்பலாம். புராதனக் கட்டடங்கள், சுற்றுலாத் தலங்கள், அவரவர் வீடுகள், செல்லப்பிராணிகளின் புகைப்படங்களும் அஞ்சல் தலைகளாக வெளியிடப்படும்.தற்போது பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாரியப்பனின் தபால்தலை, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் தபால்தலை ஆகியனவும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai