Enable Javscript for better performance
மணல் திருட்டு: டிப்பர் லாரிகள், ஜெசிபி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கடலாடி அருகே கண்மாய்க்குள் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய 2 டிப்பர் லாரிகள், 2 ஜெசிபி இயந்திரங்களை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்து அவற்றின் ஓட்டுநர்கள் 4 பேரை கைது செய்தனர்.
       கடலாடி அருகே சிறுகுடி கண்மாய்க்குள் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக கடலாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஆய்வாளர் எம்.முத்துராஜ் தலைமையிலான காவலர்கள் கண்மாய்க்குச் சென்று விசாரணை நடத்தினர்.    அங்கு அனுமதியின்றி மணல் அள்ளுவது தெரிய வந்தது. இதையடுத்து மணல் திருடியதாக டிப்பர் லாரி ஓட்டுநர்கள் மருதங்க நல்லூரைச் சேர்ந்த கருப்பசாமி(37), பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த மூர்த்தி(39), ஜெ.சி.பி இயந்திர இயக்குபவர்கள் சிவகங்கையைச் சேர்ந்த அந்தோணி(40), விருத்தாச்சலத்தைச் சேர்ந்த மணிகண்டன்(26) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மணல் அள்ளிய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai