Enable Javscript for better performance
மாட்டு வண்டி மீது ஆட்டோ மோதல்: கணவர் ஓட்டிய ஆட்டோவில் சென்ற மனைவி சாவு- Dinamani

சுடச்சுட

    

    மாட்டு வண்டி மீது ஆட்டோ மோதல்: கணவர் ஓட்டிய ஆட்டோவில் சென்ற மனைவி சாவு

    By DIN  |   Published on : 15th October 2016 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுகுளத்தூர் அருகே மேலச்செல்வனூர் கிராமத்தில் வசித்து வரும் குமாரசாமி மகன் சிவக்குமார்(32). இவரது மனைவி சித்ராதேவி. சிவக்குமார் ஓட்டிய ஆட்டோவில் சித்ராதேவி சென்றபோது, சாயல்குடி அருகே சண்முககுமாரபுரம் பகுதி பேருந்து நிறுத்தம் அருகே மாட்டு வண்டி மீது ஆட்டோ மோதியுள்ளது. இதில் சித்ராதேவி பலத்த காயம் அடைந்து ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
      சம்பவம் தொடர்பாக மாட்டு வண்டியின் உரிமையாளரான அதே சண்முககுமாரபுரம் பகுதியை சேர்ந்த வீரபெருமாள் மகன் முத்துச்சாமி(60)சாயல்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai