Enable Javscript for better performance
ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்- Dinamani

சுடச்சுட

    

    கடந்த 8 நாள்களாக மேற்கொண்டிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ராமேசுவரம் மீனவர்கள் வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றனர்.
      இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து வைத்துள்ள தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்களின் 115 படகுகளையும், இலங்கை சிறையிலுள்ள 5 மீனவர்களையும் விடுவிக்கக் கோரியும், இலங்கை கடற்படையினரின் தாக்குதலை நிறுத்தக் கோரியும் ராமேசுவரம் மீனவர்கள் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் காலைவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
     கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் மீனவ சங்க பிரதிநிதிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துறைமுக மீனவர் சங்க செயலர் தேவதாஸ் தலைமை வகித்தார்.
    கூட்டத்தில், தீபாவளிப் பண்டிகை வருவதையொட்டியும், மீனவர்களின் வாழ்வாதாரம் கருதியும் கடந்த 8 நாள்களாக மேற்கொண்டிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று சனிக்கிழமை முதல் கடலுக்கு செல்வது என முடிவெடுக்கப்பட்டது.  
    இதையடுத்து மீன்பிடி சாதனங்களை தயார் செய்யும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai