ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வினை தீர்க்கும் வேலவர் ஆலயத்தில் புதன்கிழமை வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
ராமநாதபுரம் வினைதீர்க்கும் வேலவர் ஆலயத்தில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த மே 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புதன்கிழமை பட்டினம் காத்தான் ஸ்ரீவிநாயகர் ஆலயத்திலிருந்து பால் குடங்கள் எடுத்து வரப்பட்டு முருகப்பெருமானுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றன.
விழாவை முன்னிட்டு முருகப்பெருமான் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து கோயிலில் நடந்த அன்னதானத்தை பட்டினம் காத்தான் ஊராட்சி முன்னாள் தலைவர் எம். சித்ராமருது தொடங்கிவைத்தார். இரவு பக்தர்கள் காவடியுடன் பூக்குளி இறங்கும் வைபவமும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.