ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் லாரி மோதியதில் காவல் சார்பு- ஆய்வாளர் உயிரிழந்தார்.
நயினார்கோவில் காவல் நிலையத்தில் சார்பு-ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் செல்வராஜ் (56). குடும்பத்துடன் ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் வசித்து வந்தார். வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் நயினார்கோவில் காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
தேத்தாங்கால் வளைவுச் சாலையில், எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில், தலையில் பலத்த காயமுற்ற அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நயினார் கோயில் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
மேலும் இவ்விபத்து குறித்து வழக்குப் பதிந்து தவளைக் குளத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சதீஷ்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த சார்பு- ஆய்வாளருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ராஜசேகரன் என்ற மகனும், உமாமகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். மருத்துவமனையில் அவரது உடலுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் சுடுகாட்டில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.