அசல் ஓட்டுநர் உரிமத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரத்தில் புதன்கிழமை ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்க சிஐடியூ பிரிவு சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யூ.பிரிவின் மாவட்ட தலைவர் ஜான் சௌந்தர்ராஜ் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ. அமைப்பின் நிர்வாகிகள் எம்.சிவாஜி,காசிநாததுரை,குருவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க மாவட்டச் செயலாளர் என்.பி.செந்தில் வரவேற்று பேசினார்.
சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் எஸ்.ஏ.சந்தானம், ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகி சண்முகராஜன், டி.யூ.சி.சி.அமைப்பின் மாவட்டச் செயலாளர் மணிபாரதி, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் சி.ஆர்.செந்தில்வேல் உள்ளிட்டோர் கோரிக்கைளை விளக்கிப்பேசினர். வாகன ஓட்டுநர்கள் அசல் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.