கமுதி மற்றும் கமுதியை சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கோட்டைமேடு, நாராயணபுரம். கல்லுப்பட்டி, சம்பகுளம்,முத்தாலங்குளம், பாப்பணம், பசும்பொன் ,பாக்குவெட்டி, கருங்குளம், சோடனேந்தல்,நெடுங்குளம், சடையனேந்தல் உள்ளிட்ட கமுதி சுற்று வட்டார பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் மழை பெய்தது. இதையடுத்து கமுதி பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
இந்த மழை காரணமாக கமுதி பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது வயல்களை உழவு செய்து மானாவாரி பயிராக நெல் விதைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.