இடி தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புளியங்குடி கிராமத்தைச்சேர்ந்தவர்கள் லெட்சுமணத்தேவர் மகன்
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புளியங்குடி கிராமத்தைச்சேர்ந்தவர்கள் லெட்சுமணத்தேவர் மகன் திருநாவுக்கரசு(26), ராமலிங்கம் மகன் தனசேகரன் (33)ஆகியோர் மின்னல் தாக்கியதில் இறந்தனர்.  இறந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா  ரூ.4 லட்சம் வழங்க மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில், தனசேகரனின் மனைவி வசந்தி, திருநாவுக்கரசின் தந்தை லெட்சுமணன் ஆகியோர்  வங்கி கணக்கில் ரூ.4 லட்சத்தை வரவு வைத்து அதற்கான ஒப்புதல் ரசீதை பயனாளிகளிடம்  முதுகுளத்தூர் வட்டாட்சியர் சி.ஜெயமணி வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com