Enable Javscript for better performance
பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட  தம்பதியை தாக்கிய 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட  தம்பதியை தாக்கிய 4 பேர் கைது

    By DIN  |   Published on : 22nd October 2017 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீபாவளி பண்டிகையின் போது, பரமக்குடியில் வீட்டின் முன்பு பட்டாசு வெடித்தவர்களை கண்டித்த தம்பதியை தாக்கிய 4 பேரை, போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
         பரமக்குடி எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த தேவசகாயம் மகன் மாரி (55). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் திருமாள் மகன் முருகன் (45). தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முருகன் தரப்பினர் மாரியின் வீட்டின் முன்பாக பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர். இதனை, மாரியும் அவரது மனைவி மூக்கம்மாளும் (50) கண்டித்துள்ளனர்.
         இதனால் கோபமடைந்த முருகன், அவரது மகன் ஹரிசங்கர் (25), மனைவி வள்ளி (40) மற்றும் உறவினர் பாண்டியன் (25) ஆகிய 4 பேரும் சேர்ந்து மாரியையும் அவரது மனைவி மூக்கம்மாளையும் தாக்கினராம். இதில் பலத்த காயமுற்ற தம்பதியினர், பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
         இது குறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் மாரி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து ஹரிசங்கர், முருகன், பாண்டியன், வள்ளி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai