திருவாடானை அருகே ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து 5 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
திருவாடானை அருகே அடுத்தகுடி ஆற்றில் மணல் கடத்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் திருவாடானை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் செவ்வாய்கிழமை இரவு சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டார்.
அப்போது மதுரை மாவட்டம் கொடிகுளத்தை சேர்ந்த பாண்டி (28), டிராக்டர் ஓட்டுநர்கள் பீட்டர்(24), நகரிகாத்தானை சேர்ந்த காளிதாஸ்(20), குஞ்சங்குளத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி (60), பாலசுப்பிரமணியன்(40), கற்காத்தகுடியை சேர்ந்த ஆரோக்கியம்(60)ஆகிய 5 பேர் அனுமதியின்றி மணல் அள்ளுவது தெரியவந்துள்ளது.இதையடுத்து 5 பேரையும் கைது செய்தனர்.
மேலும் மணல் கடத்த பயன்படுத்திய 4 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேல் நடவடிக்கைக்காக ராமநாதபுரம் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.